அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு - விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல்

11 hours ago 1

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றது. இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article