அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு: தமிழ்நாடு காங். வரவேற்பு

1 month ago 6

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி எந்த வகையிலும் தப்பிக்க வழியில்லாமல் வழக்கு விசாரணை நடைபெற்றது பாராட்டத்தக்கதாகும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படாது என்பது உறுதியாகியிருக்கிறது, என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தண்டனை விவரத்தை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகாரில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

Read Entire Article