சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் பல்வேறு படிப்புகளில் முதலிடம் பிடித்த 503 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்ஆர்.என்.ரவி, தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் சஹஸ்ரபுதே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் உயர் கல்வித் துறை செயலாளருமான கோபால் கலந்து கொண்டார்.
இந்த பட்டமளிப்பு விழாவில், 32 மாணவர்கள் 36 மாணவிகள் என 68 பேருக்கு பதக்கங்கள், ஆராய்சி படிப்புகான பட்டங்கள் என மொத்தம் 503 மாணவர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். மேலும் ஆராய்ச்சி படிப்பில் 435 மாணவர்கள், எம்.எஸ் படிப்பில் ஒருவர், முதுகலையில் 20,319 பேர், இளநிலயில் 94,638 மாணவர்கள் என மொத்தம் 1,15,393 பேர் பட்டம் பெற்றனர். தேசிய அங்கீகார வாரிய் தலைவர் அனில் சஹஸ்ரபுதே பேசுகையில், ‘‘உயர்கல்வி பயில்பவர்கள் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் உள்ளது” என்றார்.
* அமைச்சர் புறக்கணிப்பு
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் பங்கேற்று சிறப்பிப்பார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் கோவி.செழியன் விழாவில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே கடந்த 21ம் தேதி சென்னையில் நடைபெற்ற திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post அண்ணா பல்கலை கழக 45வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கினார்: 1,15,393 பேர் பட்டம் பெற்றனர் appeared first on Dinakaran.