முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட முறைகேட்டை தடுக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்புணர்வு

1 hour ago 2

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர் களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரி வித்து, பெயரை பதிவு செய்து, "பிக்மி” எண் பெற்றவுடன் கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத் தில் ரூ.6,000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 9-வது மாதத் தில் ரூ.2,000 வழங்கப்படுகிறது. அதேபோல, பேறு காலத்தில் 3-வது மற்றும் 6-வது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட் டகங்கள் வழங்கப்படுகிறது. அதில், உடல் திறனை மேம்படுத் தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, பிளாஸ்டிக் கப், வாளி, ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத் திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.

Read Entire Article