திருவள்ளூர்: அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள சிலைக்கு நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், தலைமையில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், டி.செல்வகுமார், பாலகிருஷ்ணன் முன்னிலையில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏ க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கே.திராவிடபக்தன், ஆர்டிஇ.ஆதிசேஷன், எஸ்.மகாலிங்கம், மாவட்ட சேர்மேன் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பத்தூர், சிவானந்தம் நகரில் உள்ள சிலைக்கு திமுக ஆதிதிராவிட நல அணி செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து 500 ஏழை, எளியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினர்.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ ஆண்டரசன்பேட்டை, பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார். அப்போது மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், வீரமணி, கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், எஸ்.ஏகாம்பரம், ஏ.கே.சிவராமன் உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பூண்டி எஸ்.பாபு, சி.பி.குமார், நயப்பாக்கம் மோகன், பொன்னுதுரை, கோவிந்தன், ஒதிகை தாமஸ், சரவணன், தங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில செயலாளர் அஸ்வின்குமார், நகரத் தலைவர் ஜே.ஜோஷி பிரேம் ஆனந்த், மாவட்ட நிர்வாகிகள் தளபதி மூர்த்தி, சரஸ்வதி, மூர்த்தி, வினோத், மாயாண்டி, ஹசின் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் நகர செயலாளர் ஜி.கந்தசாமி, என்.ராதாகிருஷ்ணன், ஆர்.ராஜி, எஸ்.ஏ.நேசன், எம்.எழிலரசன், எம்.ஜோதி, துக்காரம், சந்திரசேகர், புங்கத்தூர் டி.தேவா, ராஜேஷ், கவுன்சிலர்கள் எல்.செந்தில்குமார், ஆனந்தி சந்திரசேகர் ஆகியோர் மாலை அணிவித்து வழங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் மாலை அணிவித்து வணங்கினார். இதில் நிர்வாகிகள் பத்மாவதி தசரதன், ரவி, ஈசன், ஞானம், செந்தில்ராஜ், தமிழ்வாணன், குட்டி, சுதாகர், அன்பு, ராபின், ஆண்டனி, ராஜா, சதீஷ், ரமேஷ், பிரபாகரன், முரளி, சங்கீத் ராஜ், ராம தண்டலம் சதீஷ், குட்டி, விஜயகாந்த், பாஸ்கர், செல்வம், திலீப், அம்பேத்கர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் பகுஜன் பிரேம் தலைமையில் மாநில நிர்வாகிகள் டி.மைக்கேல்தாஸ், சத்தியமூர்த்தி, தமிழ்மதி, மாவட்டத் தலைவர் ஹரி ஆகியோர் மாலை அணிவித்தனர். அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் திருவள்ளூரில் மாநில செயல் தலைவர் எஸ்.மாரிமுத்து தலைமையில் நிர்வாகிகள் ஏழுமலை, தேவதாஸ், ரங்கன், கேசவன், மணியரசு, ஏகலைவன் முன்னிலையில் தமிழர் பேரரசு கட்சி நிறுவனர் செவ்வை கே.கணேசன், டி.கே.ராஜா, ஆர்.டி.சகாயம், எஸ்.தேவாசீர்வாதம் ஆகியோர் மாலை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்க நிறுவனர் வை.பாலசுந்தரத்தின் 5 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
The post அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர், எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.