அணு ஆயுதத்திற்கு எதிரான பிரசாரம் ஜப்பான் சேவை அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

4 months ago 17

ஓஸ்லா: மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானின் நிஹான் ஹிடான்கியோ அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் மூலம் அணு ஆயுதத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இந்த அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை கொண்டு ஜப்பானில் நிஹான் ஹிடான்கியோ அமைப்பு கடந்த 1956ல் உருவாக்கப்பட்டது.

The post அணு ஆயுதத்திற்கு எதிரான பிரசாரம் ஜப்பான் சேவை அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article