சென்னை: பாங்க் ஆப் பரோடா வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சரவணகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரை குடியிருப்பு பிரிவில் நடுத்தர மற்றும் உயர்ந்த விலை குடியிருப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது. உள்கட்டமைப்பு, மெட்ரோ ரயில் மற்றும் போக்குவரத்து இணைப்பு, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுலபமாக கடன் கிடைக்கும் வசதி என்று மேலும் பல அம்சங்கள் குடியிருப்பு பிரிவு வளர முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. இந்த வளர்ச்சியை ஊன்றுகோலாக வைத்து பாங்க் ஆப் பரோடா தனது 4வது பிராப்பர்ட்டி பேரை இன்று மற்றும் நாளை (7 மற்றும் 8 தேதிகளில்), பாண்டிபஜாரில் உள்ள விஜயா மஹாலில் நடத்துகிறது. 40க்கும் மேலான பில்டர்கள் தங்களது 100க்கும் மேலான பிராப்பர்ட்டிகளை குறைந்த விலையில் விற்க உள்ளனர்.
மிக குறைந்த 8.40% வட்டி விகிதத்தில் உடனடி கடன் ஒப்புதல்கள் இதில் மிக முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. இதை தவிர 14க்கும் மேலான ஏலத்தில் எடுக்கப்பட்ட வீடுகளை நியாயமான முறையில் வாங்கலாம். சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணமும், சென்னை நகரம் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதால் ரியல் எஸ்டேட்டின் குடியிருப்பு பிரிவு வளர்ச்சி உயர்ந்து கொண்டே வருகிறது. தேவைக்கு ஏற்றவாறு விலையும் உயர்ந்து கொண்டு போகிறது. ஒரு இடத்தின் விலையை ஒப்பிடும்போது இந்த பிராப்பர்ட்டி பேரில் பங்கேற்கும் பில்டர்கள் குறைந்த விலையில் அதிக சலுகைகளுடன் கொடுக்க உள்ளனர். மேலும் எந்த வங்கியிலும் கிடைக்காத குறைந்த 8.40% வட்டி விகிதத்தில் இங்கு வழங்கும் வீட்டு கடன் மேலும் ஒரு கவர்ச்சிகரமான சலுகையாக அமைவது இதன் தனி சிறப்பு. இலவச அனுமதியுடன் காலை 10.30 முதல் இரவு 7 மணி வரை இந்த பிராப்பர்ட்டி பேர் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post அட்டகாசமான 6 சலுகைகளுடன் பாங்க் ஆப் பரோடா பிராப்பர்ட்டி பேர்: இன்று, நாளை நடக்கிறது appeared first on Dinakaran.