அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

2 months ago 10

 

ஈரோடு, நவ. 11: ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஈரோடு ரோட்டில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில், கீழ் பவானி வாய்க்காலில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக வேப்பம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமானுக்கு நேற்று முன் தினம் தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவர் அளித்த தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சடலமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 70 வயது இருக்கலாம் என தெரியவந்தது. ஆனால், அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article