அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காண்பதற்கு பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பம்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

3 weeks ago 6

புதுடெல்லி: அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காண்பதற்கு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி இருக்கிறார். டெல்லியில் மூன்று குற்றவியல் சட்டங்களை தேசிய குற்ற ஆவணக்காப்பகத்துடன் செயல்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, ‘‘பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார்தாரர்களின் நலனுக்காக அனைத்து வழக்குகளுக்கும் முன் வரையறுக்கப்பட்ட நிலைகளில் விழிப்பூட்டல்கள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை அடையாளம் காண்பதற்கு பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பத்தை பின்பற்றவேண்டும். வரையறுக்கப்பட்ட காலக்கெடுவின்படி விசாரணை அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து விழிப்பூட்டல்களை அனுப்புவது விசாரணையின் செயல்முறையை விரைவுபடுத்த உதவும்” என்று வலியுறுத்தினார்.

குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நொட்வொர்க் அண்ட் சிஸ்டம்ஸ்(சிசிடிஎன்எஸ்)2.0 மற்றும் இன்டர் ஆபரபிள் கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் (ஐசிஜேஎஸ்), புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு(என்ஏஎப்ஐஎஸ்) ஆகியவற்றை சிறைகள், நீதிமன்றங்கள், வழக்கு தொடருதல் ஆகியவற்றில் செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

The post அடையாளம் தெரியாத உடல்களை அடையாளம் காண்பதற்கு பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பம்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article