அடையாறில் நவீன உடற்பயிற்சிக் கூடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

1 month ago 6

சென்னை அடையாறு மண்டலம், ஆண்டாள் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூட கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-176, வேளச்சேரி, ஆண்டாள் நகர், 2-வது பிரதான சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூட கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (20.03.2025) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள் வே.ஆனந்தம், எஸ். பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article