அடுத்த நிதியாண்டில் சென்னைக்கு ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணியை தொடங்க திட்டம்: ஐ.சி.எஃப் அதிகாரிகள் தகவல்

2 months ago 12

சென்னை: மும்பை ரயில்வேக்கு ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்கப்படுவதால், சென்னைக்கு ஒதுக்கப்பட்ட ஏசி புறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் (2025-26-ம் நிதியாண்டில்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐ.சி.எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு, வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுதவிர, எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில் பெட்டிகள் உட்பட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேக்கு இரண்டு ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு ரயில் வரும் டிசம்பரில் தயாரித்து வழங்கப்படும் என்று ஐ.சி.எஃப் தரப்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article