அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு முதல்வர் திட்டங்களை கொண்டு வருகிறார்: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

5 hours ago 2


கரூர்: அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் திட்டங்களை கொண்டு வருகிறார் என கரூரில் ரூ.40 கோடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயலிழந்து காணப்பட்டன. திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் புத்துயிர் பெற்றுள்ளன. 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 18 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட உள்ளனர். மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார் என்று கூறினார்.

 

The post அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு முதல்வர் திட்டங்களை கொண்டு வருகிறார்: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article