அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் இந்த 3 வீரர்களை அணிகள் விடுவிக்க வேண்டும் - கும்ப்ளே

1 day ago 5

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, 2026 ஐ.பி.எல். மினி ஏலத்திற்கு முன்னதாக அணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் கருதும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை அந்தந்த அணி நிர்வாகங்கள் விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த 3 வீரர்களும் அணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அடுத்த சீசனுக்கு முன் அணிகள் தக்கவைக்க வேண்டும் என்று தான் விரும்பும் வீரர்களையும் அவர் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி ரிஷப் பண்ட், மயங்க் யாதவ், (இருவரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்) ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்), அஜிங்க்யா ரகானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷான் (இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்) மற்றும் துருவ் ஜூரெல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) போன்றவர்கள் அடுத்த சீசனில் அணிகள் தக்கவைத்துக் கொள்ளத் தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார்.

Read Entire Article