அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் சாத்தியம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

19 hours ago 2

சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் என்பது சாத்தியமான ஒன்றுதான் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். என்விஎஸ்-02 செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தாண்டின் முதல் ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக நிறைவடைந்தது ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ் 02 செயற்கைகோள் துல்லியமாக சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பணி 100வது ஏவுதல், இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல், இன்று வரை நாம் 6 தலைமுறை ஏவுதல் வாகனங்களை உருவாக்கியுள்ளோம்.இந்த நேர்மையான முயற்சிகள், கடின உழைப்புக்காக நான் அவர்களை வணங்குகிறேன்.

இந்தாண்டு இஸ்ரோ பரபரப்பான ஆண்டாக இருக்கும். வரவிருக்கும் மாதங்களில் பல பணிகள் செயல்படுத்தபட உள்ளன. குறிப்பாக நாசா-இஸ்ரோவின் செயற்கை துளை ரேடெ திட்டம் (நிசார்ட்) ஜிஎஸ்எல்வி நி, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக எல்விஎம் 3 வணிக ராக்கெட், தொழிற்துறை கூட்டமைப்பால் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயல்படுத்தப்படும் 34 தொழில்நுட்பங்களை சரிபார்க்கும் செயற்கைக்கோள் (டிடிஎஸ்- 01), இரண்டு புவி கண்காணிப்பு பணிகள் மற்றும் பல செயல்பாடுகள் உள்ளன. அதேபோல அடுத்த தலைமுறை ஏவுதல் வாகனம் என்ஜிஎல்வி, சந்திரயான் 4 மற்றும் 5 பணிகள், வீனல் ஆர்பிட்டர், ஸ்ரீஹரிகோட்டாவின் 3வது ஏவுதளம் மற்றும் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதல் வளாகம் உள்ளிட்ட பல பணிகள் முன்னேற்றங்களில் இருந்து வருகிறது.

இந்த பணிகளை துரிதமாக செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் தரையிரங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். விண்வெளி துறையை சேர்த்து தங்களை முன்னெடுப்பதில் தொலைநோக்கு தலைமைத்துவம் அளித்த நமது பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 20 ஆண்டுகளில் மற்றும் எங்கள் குழுவினர் இந்த நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற பங்களிக்க வழங்கிய விண்வெளி பணிக்கு நன்றி தெரிவிக்கிறோம். இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவ 48 ஆண்டுகள் ஆனது. அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் என்பது சாத்தியமான ஒன்றுதான். நாவிக் தொழில்நுட்பத்திற்காக ஏற்கெனவே 4 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன.

தற்போது 5வது செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 3 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படும். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதல் மையம் திறக்கப்பட்டபோது ஒரு சோதனை ராக்கெட் ஏவப்பட்டது. 2 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தொழில்முறை ராக்கெட் ஏவுதல்கள் செய்யப்படும். 4ம் தலைமுறை ஏவுதல் வாகனத்தில் புதிய உந்துதல் அமைப்பு உள்ளது. இதன்மூலம் 30 டன் எடை கொண்ட ஆய்வுக் கருவிகளை கீழ் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது என்விஎஸ் 02 திட்ட இயக்குநர் தாமஸ் குரியன், சதீஷ் தவான் ஏவுதள மைய இயக்குநர் ராஜராஜன் மற்றும் விஞ்ஞானிகள் சங்கரன், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் சாத்தியம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article