அடியக்கமங்கலம் அரசு பள்ளியில் கொடிநாள் வசூல் நிதி அளிப்பு

3 months ago 11

 

திருவாரூர், டிச. 8: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி முப்படை வீரர்களின் நலன் காக்க மக்களின் பங்களிப்பை பெறும் பொருட்டு கொடிநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொடிநாள் விழாவானது தலைமையாசிரியை கவிதா தலைமையில் நடைபெற்றது.இதில் அவர் பேசுகையில், நாம் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்ற ராணுவ வீரர்கள் என்றென்றும் நமது போற்றுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் உரியவர்கள். நாட்டின் எல்லையில் நின்று காக்கும் ராணுவ வீரர்களால் தான் நம்மால் உண்டு மகிழ்ந்து உறங்க முடிகிறது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கொடிநாள் நிதியாக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை தலைமையாசிரியை கவிதாவிடம் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழாசிரியர் தமிழ்காவலன் வழங்கினார். விழாவில் உதவி தலைமை ஆசிரியர்கள் ரமேஷ், சுதர்சன், ஆசிரியர் புலவர் பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

 

The post அடியக்கமங்கலம் அரசு பள்ளியில் கொடிநாள் வசூல் நிதி அளிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article