சென்னை: அடிமைப்பட்டு உயிர் வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிர் விடுவோம் என்று முழக்கமிட்டவர் அழகு முத்துக்கோன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது திருவுருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்; “அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர்விடுவோம்” என்று முழக்கமிட்டு விடுதலை வேட்கைக்கான விதையைத் தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் நம்முள் கனன்று கொண்டே இருக்கட்டும்!. என தெரிவித்துள்ளார்.
The post அடிமைப்பட்டு உயிர் வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிர் விடுவோம் என்று முழக்கமிட்டவர்: அழகு முத்துக்கோனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! appeared first on Dinakaran.