விருதுநகர், டிச.17: அடிப்படை வசதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தொழிலாளர் கட்சி முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், வத்திராயிருப்பு ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரம் தம்பிபட்டி கிராமத்தில் 150 பட்டியலின குடும்பங்கள் உள்ளன. கிறிஸ்துவ ஆலயம் அருகில் கட்டப்பட்டு வரும் பெண்களுக்கான சுகாதார வளாகத்தை மாற்று இடத்தில் கட்ட வேண்டும்.
அடிப்படை வசதிகளாக குடிநீர், சாலை, குளியல் தொட்டி, சமூதாய கூடம், சுடுகாட்டிற்கான அடிப்படை வசதிகள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். விருதுநகர் டிஎஸ்பி பவித்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கலெக்டரிடம் மனு அளித்து களைந்து சென்றனர்.
The post அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.