புதுக்கோட்டை, பிப்.22: அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதுக்கோட்டையில் உள்ள நுகர் பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு அங்கு பணிபுரியும் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது,புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வருவதாகவும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணியாற்றி வருவதாகவும் அவர்களின் பெயர்களை பதிவேட்டில் சேர்க்க வேண்டும்.அதேபோல் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்
The post அடிப்படை ஊதியம் கேட்டு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்குவோர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.