அஞ்சலி, நிவின் பாலி நடிக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

3 hours ago 2

சென்னை,

'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம். தற்போது இவர் 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் நிவின் பாலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளநிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.

உழவர் திருநாள் வாழ்த்துகள் lபொங்கட்டும் இனிய நினைவுகள்... #YezhuKadalYezhuMalai ன் ட்ரைலர்.. frm 20 th feb@sureshkamatchi @VHouseProd_Offl @NivinOfficial @yoursanjali @sooriofficial @Music_Santhosh @madhankarky @thisisysr @thinkmusicindia @Johnmediamanagr #DirectorRam pic.twitter.com/2YKNEqUPoy

— Actor Soori (@sooriofficial) January 15, 2025
Read Entire Article