'ஹரி ஹர வீரமல்லு' : பவன் கல்யாண் பாடிய முதல் பாடலின் புரோமோ வெளியீடு

3 hours ago 4

சென்னை,

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.

இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'மாத வினாலி' என்று தொடங்கும் முதல் பாடலை நடிகர் பவன் கல்யாண் பாடியுள்ளார். இப்பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்பாடல் வரும் 17-ம் தேதி காலை 10.20 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Beginning the Musical Storm #HariHaraVeeraMallu 1st Single Promo Out Now #MaataVinaali - https://t.co/DQ03ZiNB5iSung by the one and only, POWERSTAR @PawanKalyan garu A @mmkeeravaani Musical Lyrics by #PenchalDasFull song out on 17th Jan at 10:20 AM. pic.twitter.com/hUhEC6fvaA

— Mega Surya Production (@MegaSuryaProd) January 14, 2025
Read Entire Article