
சென்னை,
சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கும் அஜித் குமாரின் செயலை பாராட்டும் விதமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவிரவித்தார். அந்த விருது வழங்கும் விழாவில் அஜித் குமார் குடும்பத்தினரும் கலந்து கொண்டார். இந்திய அரசின் உயரிய விருதுகளின் ஒன்றாகப் பார்க்கப்படும் பத்மபூஷன் விருதை அஜித்குமார் பெற்றதற்கு, அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின், டெல்லியில் இருந்து குடும்பத்தினருடன் நடிகர் அஜித் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் "அனைவருக்கும் நன்றி.. விரைவில் நேரில் சந்திப்போம்" என கூறிவிட்டு சென்றார். அவரை தொடர்ந்து பேசிய நரைக ஷாலினி, ராஷ்டிரபதி பவனில் அஜித் விருது பெற்றதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டார். மேலும், தனது கணவர் விருது பெற்றது பெருமையாக இருந்ததாகவும், அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.