சென்னை: அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் அன்மையில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. மைதிலி மூவீஸ் மேக்கர் என்ற நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சகலகலா வல்லவன் படத்தில் இளமை இதோ படல், நாட்டுப்புற பாட்டில் இடம் பெற்ற ஒத்த ரூபாய் பாடல் குட் பேர் அக்லியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் தியாகராஜன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தங்களுடைய அனுமதிபெறாமல் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதனை நீக்க வேண்டும் எனவும், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு பெறப்பட்ட வருமானத்தின் கணக்கு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
The post அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் appeared first on Dinakaran.