அஜய் தேவ்கனின் "ரெய்டு 2" டீசர் வெளியீடு

2 days ago 2

மும்பை,

அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது. இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ராஜ் குமார் குப்தா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் வில்லனாக நடிக்கிறார்.

பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில்உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் முன்னதாக பிப்ரவர மாதம் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ரெய்டு 2 வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 'ரெய்டு 2' படத்தை தொடர்ந்து, 'சன் ஆப் சர்தார் 2' படத்தில் அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். 

74th Raid, ₹4200 Crores. Iss baar baazi hogi sabse badi! #Raid2 Teaser out now!: https://t.co/yNY9DvJ9vFKnocking in cinemas near you on 1st May, 2025. pic.twitter.com/z5lKTpS0Z0

— Ajay Devgn (@ajaydevgn) March 28, 2025

படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் அஜய் 74 ரெய்டு மற்றும் அவரது நேர்மையினால் 74 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக நடித்து இருக்கும் ரிதீஷ் தேஷ்முக்கிடம் 75 வது ரெய்டை நடத்தவுள்ளார் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.

Read Entire Article