கவுகாத்தி: அசாமின் திமா ஹசாங் மாவட்டத்தில் உள்ள உம்ரங்சோவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் திங்களன்று திடீரென மழை வெள்ள நீர் புகுந்தது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கினார்கள். நீண்ட தேடுதலுக்கு பின் கடந்த 8ம் தேதி சுரங்கத்திற்குள் சிக்கி உயிரிழந்த நேபாளத்தை சேர்ந்த தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது. ஆறாவது நாளாக நேற்று மேலும் 3 பேரின் சடலங்கள் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதுவரை 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 5 பேரை மீட்கும் பணி நடக்கிறது.
The post அசாம் நிலக்கரி சுரங்க விபத்து மேலும் 3 பேர் உடல்கள் மீட்பு appeared first on Dinakaran.