பணி: ரைபிள்மேன்/ரைபிள் உமன்- மொத்த இடங்கள்-38.
விளையாட்டு பிரிவுகள் விவரம்:
a) அதலடிக்ஸ்
i) 400 மீட்டர்- 2 இடங்கள் (ஆண்-1, பெண்-1)
ii) நீளம் தாண்டுதல்- 2 இடங்கள் (ஆண்-1, பெண்-1)
iii) ஜாவலின்- 2 இடங்கள் (ஆண்-1, பெண்-1)
b) பென்சிங்- 4 இடங்கள் (ஆண்-2, பெண்-2)
c) கால்பந்து- 6 இடங்கள் (ஆண்-3, பெண்-3)
d) வில்வித்தை- 6 இடங்கள் (ஆண்-3, பெண்-3)
மேற்குறிப்பிட்ட விளையாட்டு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரைபிள்மேன்/ரைபிள் வுமன் பணிகளுக்கான எழுத்து மற்றும் விளையாட்டு திறன் தேர்வு நாகலாந்து, கொஹிமாவில் நடைபெறும். நவ.25ம் தேதி முதல் தேர்வு நடைபெறும். எந்தெந்த விளையாட்டு, எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
e) பேட்மிண்டன்- 4 இடங்கள் (ஆண்-2, பெண்-2)
f) துப்பாக்கி சுடுதல்- 4 இடங்கள் (ஆண்-2, பெண்-2)
g) ஜூடா- 4 இடங்கள் (ஆண்-2, பெண்-2)
h) கராத்தே- 4 இடங்கள் (ஆண்-2, பெண்-2)
மேற்குறிப்பிட்ட விளையாட்டு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு எழுத்து மற்றும் விளையாட்டு திறன் தேர்வு நாகாலாந்து, திமப்பூர், சுகோவியில் உள்ள அசாம் துப்பாக்கிப் படை பயிற்சி பள்ளியில் நடைபெறும்.
வயது: பொது மற்றும் ஒபிசியினருக்கு 1.8.2024 அன்று 18 முதல் 28க்குள். எஸ்சி/எஸ்டியினர் 18 முதல் 33க்குள்.
தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சர்வதேச/ தேசிய/ பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்றிருக்க வேண்டும்.
உடல் அளவு: ஆண்கள் 170 செ.மீ., உயரமும், பெண்கள் 157 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பளவு 80 செ.மீ., அகலமும், 5 செ.மீ., விரிவடையும் தன்மையும் இருக்க வேண்டும். பழங்குடியின ஆண்கள் 162.5 செ.மீ., உயரமும், பெண்கள் 150 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். பழங்குடியின ஆண்களுக்கு மார்பளவு 76 செ.மீ அகலமும், 5 செ.மீ விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.assamrifles.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2024.
The post அசாம் துப்பாக்கி படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை appeared first on Dinakaran.