சென்னை: மேட்டூர் எம்எல்ஏவுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மேட்டூர் எஸ்.சதாசிவம் (பாமக) பேசுகையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சரித்திர நாயகன் என குறிப்பிட்டு பேசினார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘அது என்ன, எதிர்க்கட்சித் தலைவர் என்றால் ‘சரித்திர நாயகர்’. நாங்கள் என்ன சும்மா மூத்த உறுப்பினரா?. வெறுமனே மூத்த அமைச்சர் என்று சொன்னால் நீங்கள் கேட்ட திட்டம் நிச்சயம் வராது. அங்கு என்ன கூறினீர்களோ அது இங்கும் வர வேண்டும்’’ என்றார். (அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது)
The post அங்கு மட்டும் சரித்திர நாயகர்?இங்கு மட்டும் மூத்த அமைச்சரா? அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு appeared first on Dinakaran.