புதுடெல்லி: தேசிய பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும், அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கி விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில் வயர்லெஸ் சாதனங்களை விற்பனை செய்வது சட்டப்பூர்வ கடமைகளை மீறுவது மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்கும் விற்பனையாளர்கள் அனைத்து தொடர்புடைய ஒழுங்குமுறை தரநிலைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற வணிக தளங்களில் அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கி சாதனங்களை விற்பனை செய்வதற்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
The post அங்கீகாரமற்ற முறையில் வாக்கி டாக்கி விற்பனையால் ஆபத்து: நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.