தர்மபுரி, பிப்.15: தர்மபுரி வெளிப்பேட்டைத் தெரு அங்காளம்மன் கோயில், அறங்காவலர் குழு பதவியேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவராக லட்சுமி ரமேஷ்பாபு, உறுப்பினர்களாக மாது, கோபி, இளங்கோ, உமாசங்கர் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். புதிய அறங்காவலர் குழு தலைவருக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கௌதமன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
The post அங்காளம்மன் கோயில் அறங்காவலர் குழு பதவியேற்பு appeared first on Dinakaran.