அக்னிவீர் திட்டத்தில் விமானப்படையில் வேலை

4 months ago 11

பணி: AGNIVEER (Agniveer Vayu Intake 01/2026)

சம்பளம்: முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம். 2ம் ஆண்டு ரூ.33 ஆயிரம். 3ம் ஆண்டு ரூ.36,500. 4ம் ஆண்டு ரூ.40 ஆயிரம்.
வயது: 17 வயது முதல் 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.01.2005க்கும், 01.07.2008க்கும் இடைப்பட்ட தேதியில் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: கணித பாடப்பிரிவு அல்லது தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வே்ணடும் அல்லது மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும். ஆண்கள் மார்பளவு சாதாரண நிலையில் 77 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

இந்திய விமானப்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே உடல் திறன் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடல் திறன் தேர்வில் ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடித்தல், பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடித்தல் ஆகிய போட்டிகளும், குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ்அப்ஸ், சிட்அப்ஸ், ஸ்குவாட் பயிற்சிகளை செய்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் இ. மெயிலில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அடிப்படை ராணுவ பயிற்சிக்குப் பின் 4 ஆண்டு பணி வழங்கப்படும். இதர சலுகைகள் உள்பட கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.01.2025.

The post அக்னிவீர் திட்டத்தில் விமானப்படையில் வேலை appeared first on Dinakaran.

Read Entire Article