சென்னை: அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிகமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதே படகுகள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதோடு தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நீர்வழிகளான கால்வாய்கள், மற்றும் ஆறுகளை நீர்வளத்துறை போன்ற மற்ற சேவை துறைகளுடன் இணைந்து மாநகராட்சி தூர்வாரியும், சுத்தம் செய்தும் வருகிறது. மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் வருகிற அக்டோபர் 15ம் தேதிக்குள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்படும். மழைக் காலத்தை எதிர்கொள்ள அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும்: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.