அக்.16ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

1 month ago 6

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16,17 தேதிகளில் தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழை:

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னயில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அக்.16-ல் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

மேலும், அக்.16-ல் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்.17-ல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்.17-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

The post அக்.16ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article