டெல்லி: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அக்.15, 16-ல் பாகிஸ்தான் செல்கிறார். பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. பிரதமர் மோடிக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநாட்டில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் அல்லது அதிபர்கள் பங்கேற்பார்கள்.
The post அக்.15, 16-ல் பாகிஸ்தான் செல்கிறார் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்..!! appeared first on Dinakaran.