அகிலந்திய இறகுப்பந்து போட்டியில் முதலிடம் பழநி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

2 weeks ago 1

திண்டுக்கல், ஜன. 22: மும்பையில் கடந்த மாதம் அகில இந்திய இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் 28 மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 11 வயதுக்குட்பட்ட பிரிவில் தமிழக அணி சார்பில் பழநி தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர் சிபிஜெரோ கலந்து கொண்டார்.

இதில் மாணவர் சிபி ஜெரோ முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்று ஊருக்கு திரும்பிய அவருக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி பொன்னாடை போர்த்தி வாழ்த்தி பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் நாட்டாண்மை காஜா மைதீன், கால்பந்து கழக செயலாளர் சண்முகம், துணை தலைவர் ரமேஷ் படேல், விளையாட்டு அலுவலர் சிவா, புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி லூர்து மரியபிரிஜிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அகிலந்திய இறகுப்பந்து போட்டியில் முதலிடம் பழநி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article