அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலை

2 hours ago 2

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தற்போது காலியாகவுள்ள குரூப் பி மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 4576

பதவிகள் வாரியாக காலியிடங்கள் விபரம்:

உதவி உணவியல் நிபுணர்/உணவு நிபுணர்/- 24, நிர்வாக உதவியாளர்- 88, கீழ் பிரிவு எழுத்தர்- 211,உதவி பொறியாளர் (சிவில்)- 22, உதவி பொறியாளர் (மின்சாரம்)- 19, உதவி பொறியாளர் -18, ஆடியோமீட்டர் தொழில்நுட்ப வல்லுநர்- 14, மின் வல்லுநர்- 25, பம்ப் மெக்கானிக் -10, சலவை மேற்பார்வையாளர்- 6, கடை காப்பாளர் (மருந்துகள்) 4,கடை காப்பாளர் (பொது) 8,மருந்தாளர் (ஹோமியோபதி) 12,தலைமை காசாளர் 30,ஜூனியர் மருத்துவ பதிவு அலுவலர் (வரவேற்பாளர்)- 3,மருத்துவ பதிவு அலுவலர் 9, தொழில்நுட்ப வல்லுநர் 9,மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் 633,மல்டி-டாஸ்கிங் பணியாளர்/ஆபரேட்டர் (E&M) 663,டிசெக்ஷன் ஹால் உதவியாளர் 14,தொழில்நுட்ப வல்லுநர் 126,நூலக உதவியாளர் தரம் II 6,ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் 4,தொழில்நுட்ப வல்லுநர் (தொலைபேசி) தரம் IV/தொலைபேசி ஆபரேட்டர் 4,மெக்கானிக் (AC&R)/மெக்கானிக்(ஏர் கண்டிஷனிங் & குளிர்பதன) 14,சுவாச ஆய்வக உதவியாளர் 2,தொழில்நுட்ப உதவியாளர்/டெக்னீஷியன் 253,ரேடியோகிராபர் I -21,பல் சுகாதார நிபுணர்/பல் தொழில்நுட்ப வல்லுநர் 369,ரேடியோதெரபியூடிக் தொழில்நுட்ப வல்லுநர் 33,அணு மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் 9,கண் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் தரம் I -29,ஜூனியர் பெர்பியூஷனிஸ்ட்- 12,டெக்னீசியன் (ப்ரோஸ்தெடிக்ஸ் & ஆர்தோடிக்ஸ்) 1,பேரியாட்ரிக் ஒருங்கிணைப்பாளர் 16,மருந்தாளர் (ஆயுர்வேதம்) 27,கருப்பை நிபுணர் 2,உதவி பாதுகாப்பு அதிகாரி 9,தீயணைப்பு தொழில்நுட்ப வல்லுநர்/பாதுகாப்பு - தீயணைப்பு உதவியாளர் 19,சமூக சேவகர் 10,ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர்/மூத்த இந்தி அதிகாரி 11,செயல்பாட்டாளர் (பிசியோதெரபி)/பிசியோதெரபிஸ்ட் 46,தொழில் சிகிச்சையாளர் 6,நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் 15,ஓட்டுநர் 12,மருத்துவ சமூக சேவகர் 77,கலைஞர்/மாடலர் (கலைஞர்) 9,யோகா பயிற்றுவிப்பாளர் 5,நிரலாக்குநர் 15,உதவி வார்டன்/வார்டன் 36, ஜூனியர் ஸ்கேல் ஸ்டெனோ (இந்தி) 194,மருந்தாளர் (அலோபதி) 169,மூத்த நர்சிங் அதிகாரி 813,சுகாதார ஆய்வாளர் 41,தையல்காரர் தரம் III -1,பிளம்பர் 9 ,துணை பொது மேலாளர் (சிற்றுண்டிச்சாலை) 1,ஓவியர் 1,புள்ளியியல் உதவியாளர் 3,பட்டறை உதவியாளர் (CWS) 4,உதவி ஸ்டோர்ஸ் அதிகாரிகள் 82,மெக்கானிக் ஆபரேட்டர் - இசையமைப்பாளர் 1,தொழில்நுட்ப உதவியாளர் (MRD) 234,உயிர் மருத்துவ பொறியாளர் 1,தரக் கட்டுப்பாட்டு மேலாளர் 1 .

கல்வித் தகுதி;

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பி.இ/பி.டெக், மாஸ்டர் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

எஸ்.சி/எஸ்.டி 5 ஆண்டுகளும்,

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,

பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்பு 10 ஆண்டுகளும் வழங்கப்படும்.

சம்பள விவரம்:

மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,42,400/- வரை வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல்முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), திறன் தேர்வு (பதவிக்கு ஏற்ப மாறுபடும்) மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணமாக ரூ3000/- செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ. 2400/-செலுத்த வேண்டும்.

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: https://rrp.aiimsexams.ac.in/advertisement/677cd0d849c05cf7ac74271a என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி: 07.01.2025

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:31.01.2025

தேர்வு தேதி: 26.02.2025 – 28.02.2025

இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article