அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவராக சாந்தகுமாரி மீண்டும் தேர்வு

3 days ago 2

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 36 ஆண்​டு​களாக வழக்​கறிஞ​ராக பணிபுரிந்து வருபவர் டாக்​டர் கே.​சாந்​தகு​மாரி. இவர் தமிழ்​நாடு பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் தலை​வ​ராக பதவி வகித்து வரு​கிறார். இந்​நிலை​யில் பெங்​களூரு​வில் நடந்த அகில இந்​திய பெண் வழக்​கறிஞர்​கள் கூட்​டமைப்​பின் நிர்​வாகி​களுக்​கான தேர்​தலில் அகில இந்​திய தலை​வ​ராக இரண்​டாவது முறை​யாக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். ஏற்​கெனவே கடந்த 2011-ம் ஆண்டு இந்த கூட்​டமைப்​பின் அகில இந்​திய தலை​வ​ராக பதவி வகித்​துள்​ளார்.

தவிர சர்​வ​தேச பெண் வழக்​கறிஞர்​கள் கூட்​டமைப்​பின் மண்டல துணைத்தலை​வ​ராக​வும் சாந்​தகு​மாரி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். தமிழ்​நாடு பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் செய​லா​ள​ராக​வும், உயர் நீதி​மன்ற மதுரை கிளை பெண் வழக்​கறிஞர்​கள் சங்​கத் தலை​வ​ராக​வும் உள்ள ஜ.ஆனந்​தவள்​ளி, அகில இந்​திய பெண் வழக்​கறிஞர்​கள் கூட்​டமைப்​பின் செய​லா​ள​ராக இந்த தேர்​தலில் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.

Read Entire Article