அகில இந்திய ஆக்கி: தமிழ்நாடு - மராட்டியம் ஆட்டம் 'டிரா'

2 hours ago 2

சென்னை,

எம்.சி.சி.முருகப்பா தங்க கோப்பைக்கான 96வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. 20ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - மராட்டியம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மராட்டிய அணியில் ரோஹன் பட்டீல் 22வது நிமிடத்திலும், தமிழக அணியில் சோமன்னா 42வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

Read Entire Article