'அகிம்சையின் மீது நம்பிக்கை கொள்வோம்' - மணிப்பூர் முதல்-மந்திரி

3 months ago 25

இம்பால்,

இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் இன்று மாநில தலைநகர் இம்பாலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-

"மாநிலத்தின் முதல்-மந்திரியாக மணிப்பூர் மக்களுக்கு இந்த நாளில் நான் கூறிக்கொள்ள விரும்புவது, உங்களைச் சுற்றி இருக்கும் குப்பைகளை அகற்றி தூய்மை இயக்கத்தில் இணைய முயற்சி செய்யுங்கள். அகிம்சையின் மீது நாம் நம்பிக்கை கொள்வோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். தேசத்திற்காகவும், மாநிலத்திற்காகவும் நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article