
சியட்டி,
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 'இ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர் மிலன் (இத்தாலி) 2-1 என்ற கோல் கணக்கில் உரவா ரெட் டைமண்ட்ஸ் கிளப்பை (ஜப்பான்) தோற்கடித்து.
ஒரு கட்டத்தில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் வாலென்டின் கார்போனி கோல் போட்டு இன்டர் மிலன் அணிக்கு முதலாவது வெற்றியை தேடித்தந்தார்.
இதே பிரிவில் ரிவர் பிளேட் (அர்ஜென்டினா)- மோன்டெரி (மெக்சிகோ) இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 'எப்' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் போருசியா டார்ட்மண்ட் (ஜெர்மனி) 4-3 என்ற கோல் கணக்கில் மமலோடி சன்டவுன்சை (தென்ஆப்பிரிக்கா) வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் புளுமினென்ஸ் (பிரேசில்) 4-2 என்ற கோல் கணக்கில் உல்சனை (தென் கொரியா) பந்தாடியது.