அகல்விளக்குகள் விற்பனை மும்முரம் பைக் மோதி முதியவர் பலி

5 months ago 13

 

தஞ்சாவூர், டிச 11: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் சீதாலெட்சுமிபுரம் படுகை புது தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (77). விவசாயி. சம்பவத்தன்று இவர், பாபநாசம் திருமலை ராஜன் ஆறு வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த பைக் எதிர்பாரதவிதமாக கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் பலத்த படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப்- இன்ஸ்பெக்டர்கள் செல்வமணி ஜெகஜீவன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வடசருக்கையை சேர்ந்த முகேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post அகல்விளக்குகள் விற்பனை மும்முரம் பைக் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article