புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு அகமதாபாத்தில் நடைபெறும். காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமை தாங்குவார். இதில், சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோல் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில் பாஜவின் மக்கள் விரோத கொள்கைகள், அரசியலமைப்பு மீதான பாஜவின் தாக்குதல், அதன் விளைவுகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும்” என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அகமதாபாத்தில் ஏப். 8, 9ல் காங்கிரஸ் மாநாடு appeared first on Dinakaran.