'அகண்டா 2' படத்தில் நடிக்கிறேனா? - நடிகை விஜயசாந்தி விளக்கம்

5 hours ago 2

சென்னை,

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு "அர்ஜுன் சன் ஆப் வைஜயந்தி" படத்தில் நடித்திருந்தார். நந்தமுரி கல்யாண் ராமின் தாயாக நடித்திருந்த இவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இதற்கு ரசிகர்களுக்கு விஜயசாந்தி நன்றி தெரிவித்திருந்தார். அப்போது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, "நான் அகண்டா 2 படத்தில் நடிக்கிறேன் என்பது எனக்கே தெரியாது. நீங்கள் கூறிய பின்புதான் தெரிகிறது," என்றார்.

நந்தமுரி பாலகிருஷ்ணாவும் விஜயசாந்தியும் 80 மற்றும் 90களில் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தனர். தெலுங்கு சினிமாவில் மிகவும் வெற்றிகரமான திரை ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் கடைசியாக 1993-ல் வெளியான 'நிப்பு ரவ்வா'வில் நடித்திருந்தனர்.

Read Entire Article