"அஃகேனம்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

4 months ago 20

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தும்பா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து, தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து 'அன்பிற்கினியாள்' என்ற படத்தில் நடித்தார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. அதன்படி, இப்படத்திற்கு 'அஃகேனம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. உதய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைக்கிறார்

உதய் கே இயக்கியுள்ள 'அஃகேனம்' படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக விக்னேஷ் கோவிந்தராஜன், இசையமைப்பாளராக பரத் வீரராகவன், எடிட்டராக திவேத்தியன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

'அஃகேனம்' படத்தினை ஏ&பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் உதய் கே, "இதன் திரைக்கதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி தவிர்த்து வட இந்தியாவிலுள்ள சில முக்கியமான பகுதிகளிலும் நடைபெற்றது. இப்படத்தின் பின்னணி இசை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபலமான இசை அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படத்தில் தேசிய அளவில் விருது பெற்ற ஓடிஸி நடன மேதை கங்காதர் நாயக் மற்றும் அவரது குழுவினருடன் ஏராளமான வட இந்திய நாட்டிய கலைஞர்களும் இடம்பெறும் பாடல் காட்சியில் நடனமாடி இருக்கிறார்கள். 'அஃகேனம்' திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 'மெல்லாலே மெல்லாலே' எனத் தொடங்கும் 'அஃகேனம்' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

✨ Let @pradeep_1123's soulful voice enchant you. Experience the mesmerizing melody and enchanting visuals of Mellali Mellali by watching its lyrical video now! ✨https://t.co/7r1nDfh842#pradeepkumar #mellalimellali@iarunpandianc @ikeerthipandian@kav_pandian @Shivpinkpic.twitter.com/umpSkcwL8A

— Keerthi Pandiyan (@iKeerthiPandian) February 20, 2025
Read Entire Article