![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38924932-state-05.webp)
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ், நேற்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை), மக்கள் நீதி மையத்தின் சென்னை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஏ.ஏ.சு.ராஜ் சத்யன், தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆ.மு.அசோக், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளர் ஊ.கிருபாகரன் ஆகியோரும் உடன் இருந்தனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.