அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் மனு

3 hours ago 4

புதுடெல்லி,

அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் பா.ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த கோரிக்கை மனுவில், "அ.தி.மு.க. திருத்தப்பட்ட கட்சி விதிகள் கட்சித் தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவர் போட்டியிட வேண்டும் எனில் விதிப்படி 5 வருடங்கள் உறுப்பினராக இருந்தாலே போட்டியிட முடியும். ஆனால் திருத்தப்பட்ட கட்சி விதிகள் படி கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக வேண்டும் என்று உள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு, தற்போதைய விதிகளின்படி மற்றொரு தலைமைப் போர் எழும். மேலும், பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதை மறுபரிசீலனை செய்ய சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்த முடிவு நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டது என்றும் உள்ளது. இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article