TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

3 months ago 16

சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை உள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். ரிப்பன் மாளிகையின் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து ரிப்பன் மாளிகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில்; “ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது. பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம்.

13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். 113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம்” என தெரிவித்தார்.

The post TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article