டெல்லி: என்.சி.இ.ஆர்.டி. ஆங்கில பாட புத்தக தலைப்பில் இந்தி மொழி திணிப்பது கலாச்சார காலனியாதிக்கம் என்று கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர். என்.சி.இ.ஆர்.டி. எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட ஆங்கில பாடபுத்தகங்களுக்கு இந்தி மொழியில் தலைப்பு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக 6ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தின் பெயரை பூர்வி என்றும், ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகங்களுக்கு மிருதங், சந்தூர் என சம்பந்தமே இல்லாத இசை கருவிகளின் இந்தி பெயர்கள் தலைப்புகளாக வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், குழந்தைகள் படிக்கும் ஆங்கில படங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வார்த்தைகளுக்கான பொருளை புரிந்துகொள்வதில் தடுமாற்றம் ஏற்படுவதோடு கற்றலில் உளவியல் தடைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் இந்த நடைமுறை கலாச்சார காலனியாதிக்கம் என்றும், மொழி பெரும்பான்மை வாதம் என்றும் கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர்.
The post NCERT ஆங்கில புத்தகங்களில் இந்தி: ‘கலாச்சார காலனியாதிக்கம்’ என கல்வியாளர்கள் கடும் விமர்சனம்!! appeared first on Dinakaran.