டெல்லி: உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் அதிவேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அவர் FIDE தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தனது 2வது வெற்றியை பதிவு செய்த நிலையில் FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறினார்.
இதன் காரணமாக நீண்ட காலமாக அதிக புள்ளிகளை கொண்ட இந்திய வீரரான அர்ஜூன் எரிகைசியை, குகேஷ் தற்போது பின்னுக்கு தள்ளினார். அர்ஜூன் எரிகைசி தற்போது 2779.5 புள்ளிகளுடன்4வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா (2802) மற்றும் அவரது சக நாட்டு வீரர் ஃபேபியானோ கருவானா (2798) ஆகியோர் 2 மற்று 3வது இடங்களில் உள்ளனர்.
The post FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ்! appeared first on Dinakaran.