சிவகங்கை, மே 15: கொலை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. காளையார்கோவில் அருகே நெடுவதாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (29) முன் விரோதம் காரணமாக இவரை கடந்த ஏப்ரல் மாதம் சிலர் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய தவசுகுடி பிரபு (எ) பிரபாகரன்(35), மரிச்சுகட்டி ஜனா(21), சேதாம்பல் விக்ரம் (25), இளையான்குடி வசந்த் (எ) வசந்தகுமார்(24), ஆண்டாஊரணி சிவா(எ)ராமச்சந்திரன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடி சதீஷ்வினோஜி(25). இவர் மீது காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேசனில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மானாமதுரை போலீசார் குற்ற வழக்கு ஒன்றில் வேலூர் ராமச்சந்திரன் (எ) தங்கதுரை(35) என்பவரை கைது செய்தனர். மேலும் திருப்பாச்சேத்தி போலீசார் ஆவரங்காடு லட்சுமணன்(35) என்பவரை கைது செய்தனர்.
மானாமதுரை சிப்காட் போலீசார் முருகபாஞ்சன் நல்லசாமி(44) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத், கலெக்டர் ஆஷா அஜித்திற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து 9 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
The post 9 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.