நியூயார்க்: சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரிய வகை வால்நட்சத்திரம் தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் அரிய வகை வால்நட்சத்திரம் ஒன்று சுமார் 80 ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்திய வான்வெளியில் தற்போது நுழைந்துள்ளது. சி/2023 ஏ 3 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அரியவகை வால்நட்சத்திரம் கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவை நெருங்கி வருவதை கண்டுபிடித்தனர். தற்போது செப்.28 அன்று இந்த வால்நட்சத்திரம் சூரியன் அருகே சென்று, அதன் பயணத்தை திசை திருப்பி உள்ளது. இதனால் பூமியில், இந்தியாவில் இருந்து இதை காண முடியும்.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, லடாக் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அரிய வகை வால்நட்சத்திரம் தற்போது காண முடிகிறது. இனி அடுத்த 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த வால்நட்சத்திரத்தை காண முடியாது என்பதால், இந்த வால்நட்சத்திரத்தின் வருகை மிகவும் அரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதை சிறிய தொலைநோக்கிகள், பைனாகுலர்கள் கொண்டு காலையில் சூரியஉதயத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கிழக்கு திசையை உற்று நோக்கினால் அதன் நீண்ட வால் பகுதியை தெளிவாக காண முடியும். அக்.12 முதல் சூரியன் மறைவுக்கு பிறகு மேற்கு திசையில் வருகிற 24ம் தேதி வரை தெளிவாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் தெரியும் அரிய வால்நட்சத்திரம்: அக்.24 வரை பார்க்கலாம் appeared first on Dinakaran.