சென்னை: கடந்த 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி. மற்றும் அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயிலுக்கும் பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கோயில்கள் மதம் தொடர்பானவை என்பதாலும் மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் அவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் வருமானத்தில் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.